எம்.எல்.ஏ.க்களுடன் உடனடியாக உங்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்: ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, வி.கே.சசிகலா அவசர கடிதம்!- கடிதத்தின் உண்மை நகல்.

VK SASIKALA4sasi

பிப்ரவரி 9-ம் தேதி உங்களை நேரில் சந்தித்து, அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து, ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரினேன். அதற்கான கடிதத்தையும், எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்த தீர்மான நகலையும் உங்களிடம் ஒப்படைத்தேன்.

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தனது ராஜினாமா கடிதத்தை அளித்து அதனை நீங்களும் ஏற்றுக் கொண்டு 7 நாட்கள் ஆகிறது.

எனவே, உடனடியாக உங்களை சந்திக்க நேரம் ஒதுக்குமாறும், என்னுடன் வரும் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும், சந்திப்பின் போது அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தின் நலன் கருதி ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும். அரசியல் சாசன இறையாண்மை, ஜனநாயகத்தை காக்க முன் வர வேண்டும். இவ்வாறு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, வி.கே. சசிகலா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

-கே.பி.சுகுமார்.