சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் நீடித்த ஆலோசனையின் முடிவில் சட்டமன்ற கட்சி தலைவராக அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்படார். இந்நிலையில் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பட்டியலுடன் ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி அனுமதி கேட்டிருந்தார்.
மாலை 5.30 மணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டதையடுத்து அமைச்சர்கள் ஜெயகுமார், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், கே.ஏ.அன்பழகன், ராஜலெட்சுமி, சரோஜா, டி.டி.வி. தினகரன், தளவாய் சுந்தரம், பொள்ளாச்சி ஜெயராமன் உள்பட 12 பேர் கொண்ட குழுவுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்தார்.
-கே.பி.சுகுமார்.