தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருக்கை கிழிப்பு; மைக் உடைப்பு; எதிர் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்!-நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவு; எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவிப்பு.

SPEAKERtamil-nadu-assembly FSPEAKER SEATtn.assmblytn.assmbly.2

MK.STALIN MK.STALIN1

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், ரகசிய வாக்கெடுப்பு  நடத்த வேண்டும், அதிமுக எம்.எல்.ஏக்கள் மக்களின் கருத்தை கேட்ட பின்பு  மற்றொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான  திமுக, பன்னீர்செல்வம் அணி  மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூச்சல் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

சட்டசபை செயலர் ஜமாலுதினின் இருக்கை கிழிக்கப்பட்டது. அவரது மேஜையில் இருந்த ஆவணங்களை திமுக எம்.எல்.ஏக்கள் கிழித்து வீசினர். சபாநாயகர் தனபால் இருக்கையில் அமர்ந்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இருக்கை கிழிப்பு, மைக் உடைப்பு சம்பவங்கள் அரங்கேறியதால் சபை  இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.

எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே சென்று கூறுவது? என்னை கையைப் பிடித்து இழுத்து பணி செய்ய விடாமல் தடுக்கிறீர்கள். விதிகளின் படி சபையை  நடத்தி செல்வதே எனது பணி இவ்வாறு சபாநாயகர் தனபால் கூறினார்.

சட்டப்பேரவையின் மாண்புகளை சீர்குலைத்ததால், திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதையடுத்து திமுக உறுப்பினர்களுக்கும், அவைக் காவலர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. திமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக அவையிலிருந்து வெளியேற்றினர். எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக தூக்கிவரப்பட்டார். இதை தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன் பிறகு நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதை அடுத்து எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

tn.governor

dmk mla in merina

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் திமுகவினர் தாக்கப்பட்டது குறித்து, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முறையிட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

-எஸ்.சதிஸ்சர்மா, -ஆர்.அருண்கேசவன்.