தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பில் எண்ணிக்கை குளறுபடி!- சபாநாயகர் தனபால் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்?

SPEAKER

தமிழக சட்டசபையில் 18.02.2017 நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதில் எண்ணிக்கை குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த பிரச்சனையை தெளிவுப்படுத்த வேண்டுமானால் முதலில் தமிழக சட்டப்பேரவையில் கட்சி ரீதியாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும்.

இதோ அதற்கான ஆதாரம்.

Tn.Legislative Assembly

மேற்காணும் அட்டவணைப்படி, திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

இரண்டு தரப்பிற்கும் சம எண்ணிக்கை இருந்தால் மட்டுமே சபாநாயகர் வாக்களிக்க உரிமை உண்டு.

நியமன சட்டமன்ற (ஆங்கிலோ- இண்டியன்) உறுப்பினருக்கு வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உரிமை இல்லை.

அப்படியானால், தமிழக சட்டப்பேரவையில் அ.இ.அ.தி.மு.க விற்கு 134 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம்.

இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக  வாக்களித்த எம்.எல்.ஏக்கள்-11 

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக  வாக்களித்த எம்.எல்.ஏக்கள் விவரம்:

1.ஓ.பன்னீர்செல்வம்

2.மா.பா. பாண்டியராஜன்

3.எஸ்.பி.சண்முகநாதன்

4.மாணிக்கம்

5.வி.சி. ஆறுக்குட்டி

6.மனோரஞ்சிதம்

7.மனோகரன்

8.சரவணன்

9.சின்னராஜ்

10.செம்மலை

 11.நடராஜ்

ஆக மீதமிருப்பது 123 உறுப்பினர்கள்.

இதில், கந்தர்வகோட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆறுமுகம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சில தினங்களுக்கு முன்பு சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள் அறிவுரையின் பேரில் ஆறுமுகத்துக்கு இரணிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆறுமுகம் இன்று வரை மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

கந்தர்வகோட்டை (தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகம்.

கந்தர்வகோட்டை (தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகம்.

 

Gandarvakottai (SC) B.ARUMUGAMஇதுகுறித்து இன்று (19.02.2017) மதியம் 1.14 மணிக்கு கந்தர்வகோட்டை (தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகத்தின் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் நீங்கள் கலந்து கொண்டீர்களா? என்று விபரம் கேட்டோம். நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று நம்மிடம் தெரிவித்தார்.

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார்

Coimbatore (North) MLA

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பமில்லை என்று கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்குமார் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து ஊருக்கு திரும்பி சென்று விட்டார்.

அப்படியானால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 121 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் வாக்களித்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதாக சபாநாயகர் தனபால் எப்படி அறிவித்தார்?

ஒன்று, கந்தர்வகோட்டை (தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆறுமுகம் பொய் சொல்லி இருக்க வேண்டும் (அல்லது) சபாநாயகர் தனபால் பொய் சொல்லி இருக்க வேண்டும்.

வீடியோ ஆதாரத்தை வெளியிட்டால்தான் உண்மை மக்களுக்கு தெரியும்.

 -டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com