கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குரு கொட்டுரேஸ்வர கோயில் தேர் திருவிழா 21.02.2017 அன்று வெகுசிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து கொண்டிருந்தபோது கோவில் தேர் நிலை தடுமாறி திடீரென கவிழ்ந்தது.
இதில் தேரின் அடியின் சிக்கி ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-ஆர்.மார்ஷல்.