தமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து, மாவட்டத் தலைநகரங்களில் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான உண்ணாவிரதப் போராட்டம் திருச்சியில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
-கே.பி.சுகுமார்.