முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருக்க முடிவு!- மு.க. ஸ்டாலின் வரவேற்பு.

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கோரி மார்ச் 8-ம் தேதி முதல் . பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே மார்ச் 8-ம் தேதி மேற்கொள்ள இருக்கும் உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி .பன்னீர் செல்வம் அணி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் போலீசாரிடம் மனு அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள், குளறுபடிகள் உள்ளன. எனவே, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி ஓபிஎஸ் அணியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், குடியரசுத் தலைவரை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் உண்ணாவிரத போராட்டத்திற்கு மு.. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

mks

பன்னீர் செல்வத்தின் காலம் கடந்த உண்ணா விரத போராட்ட முடிவை வரவேற்கிறேன். முதல்வர் பதவியில் இருந்த போது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்காதது ஏன்? கைதிகளை பராமரிப்பது அரசு தான். ஆனால், அரசே கைதியை போய் பார்க்கிறது என தெரிவித்துள்ளார்

-கே.பி.சுகுமார்.