என்னைக் கொலை செய்ய முன்னாள் போராளிகள் திட்டம்: கருணா கதறல்.

KARUNA-and-Douglas கருணா??????????????????? கருணா 1முன்னாள் போராளிகள் தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாக, இலங்கையின் முன்னாள் அமைச்சரும், விடுதலை புலிகள் மற்றும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் அழிவுக்கு காரணமாக இருந்த, மகிந்த ராஜபட்சேவின் கை கூலியுமான கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன்  தெரிவித்துள்ளார்.

அண்மையில் மட்டக்களப்பில் என்னைக் கொலை செய்ய முயற்சித்த முன்னாள் போராளி புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர். அது மட்டுமல்ல என்னைக் கொலை செய்ய இன்னும் சில முன்னாள் போராளிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் நான் இந்த நாட்களில் மிகவும் அவதானத்துடன் இருக்கின்றேன்.

எனது பாதுகாப்பிற்கு நான்கு போலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல. குறைந்தபட்சம் இன்னும் மூன்று நான்கு போலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கப்பட வேண்டும். எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு நான் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோருகின்றேன்.

நான் தவறுகளில் ஈடுபடுவதில்லை. எனக்கு மக்களுக்கு சேவையாற்றும் நோக்கம் மட்டுமே உண்டு. அவர்கள் சிங்களவர்களா? முஸ்லிம்களா? தமிழர்களா? என நான் பார்ப்பதில்லை. அனைவருக்கும் சேவையாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இவ்வாறு கருணா தெரிவித்துள்ளார்.

ஒரு மனிதன் திருந்தி வாழ நினைக்கும் போதுதான்; அவன் ஏற்கனவே செய்த குற்றங்களுக்கும், துரோகங்களுக்கும், பாவங்களுக்கும் தண்டைணை தொடங்கும்.

இது கருணாவின் வாழ்விலும் உறுதியாகி வருகிறது.

 -டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com