விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்: கல்லூரி விழாவில் செங்கம் டி.எஸ்.பி. ஷாக்ஜிதா பேச்சு.

02 CHENGAM IMAGE

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கரியமங்கலம், சுண்டகாய்பாளையம் பகுதியில் உள்ள சத்யம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் கு.வணங்காமுடி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முகமது வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செங்கம் டி.எஸ்.பி. செல்வி. ஷாக்ஜிதா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

“மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் அரசு அறிவிக்கும் தகுதி தேர்வுகளை தன்னம்பிக்கையோடு எழுத வேண்டும். விடாமுயற்சி இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேறலாம் என, டி.எஸ்.பி. ஷாக்ஜிதா பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

– செங்கம் சரவணக்குமார்.