நமது “உள்ளாட்சித் தகவல்” இணைய ஊடகத்தின் 20-வது ஆண்டு விழா 12.03.2017 அன்று மாலை சுமார் 3.00 மணியளவில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ சங்கீதாஸ் ஹோட்டல், சக்ரா ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் “உள்ளாட்சித் தகவல்” இணைய ஊடகத்தின் ஆசிரியர் மற்றும் உரிமையாளர் டாக்டர் துரை பெஞ்சமின் வரவேற்று உரையாற்றினார்.
செர்வைட் சோசியல் சர்வீஸ் சொசைட்டியின் செயலாளர் அருட்சகோதரி லில்லியன் மேரி, செல்வி துரைபெஞ்சமின் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இவ்விழாவிற்கு நாளந்தா கல்வி குழுமத்தின் தலைவர் இங்கர்சால் தலைமை வகித்தார்.
திருச்சி பிருந்தாவன் வித்யாலயா முதல்வர் சாத்தப்பன், திருச்சி புனித வளனார் கல்லூரி பண்ணை நிர்வாகி அருட்சகோ.அருளானந்தம், திருச்சி புனித வளனார் கல்லூரி பேராசிரியர் கே.ஆரோக்கியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வேளாண்மை தொழிட்நுட்ப ஆலோசனை குழுவின் முன்னாள் மாநில உறுப்பினர் ஆர்.ரவி, அரசு கூடுதல் வழக்கறிஞர் எஸ்.பி. கணேசன், ராக்போர்ட் டைம்ஸ் செய்தி ஆசிரியர் எஸ்.ஆர்.லெட்சுமிநாராயணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இவ்விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற சங்கத்தின் தென்மண்டல அமைப்பாளர் சுவாமி.வேல்முருகன், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், சமூக சேவகர்கள், பொதுநல ஆர்வலர்கள், ஆன்மீகவாதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக சமூக பணியாற்றி வரும் செர்வைட் சோசியல் சர்வீஸ் சொசைட்டியின் செயலாளர் அருட்சகோதரி லில்லியன் மேரிக்கு, “உள்ளாட்சித் தகவல்” இணைய ஊடகத்தின் சார்பில் “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. இவ்விருதினை பிருந்தாவன் வித்யாலயா முதல்வர் சாத்தப்பன் வழங்கி கௌரவித்தார்.
நிறைவாக செல்வன் துரை திரவியம் நன்றியுரை வழங்கினார்.
இவ்விழாவில் 12 Stream குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை “உள்ளாட்சித் தகவல்” இணைய ஊடகத்தின் நிர்வாகிகள் கே.பி.சுகுமார், ஆர்.அருண்கேசவன், ஆர்.மார்ஷல் ஆகியோர் செய்து இருந்தனர்.
-எஸ்.திவ்யா.