ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளராக வழக்கறிஞர் மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர் மருதுகணேஷ் குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.,வில் இருந்து வருகின்றனர்.
தி.மு.க.கட்சி நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர். இவர் மு.க.ஸ்டாலினின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு சாமானிய தொண்டனுக்கு தி.மு.க.வில் வேட்பாளர் அந்தஸ்து கிடைத்திருக்கிறது.
வேட்பாளர் தேர்வில், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் வழியை, தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்த தொடங்கியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com