Budgetspeech-Tamil-Date16.03.2017
தமிழக அரசின் 2017- 2018 ஆம் ஆண்டிற்க்கான பட்ஜெட்:
2 லட்சம் விவசாயிகள் பயன்படும் வகையில் உழவர் உற்பத்திக் குழு அமைக்கப்படும்.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரண உதவி ரு.20,000 ஆக உயர்வு.
பயிர் காப்பீடு மானியத்திற்கு ரூ. 522 கோடி நிதி ஒதுக்கீடு
பள்ளிக் கல்வித்துறைக்கு ரு.26,932 கோடி
உயர்க் கல்வித்துறைக்கு ரூ. 3,680 கோடி
பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு ரூ.988 கோடி நிதி.
2017-18-ல் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை தயாரிக்க திட்டம்.
அகதிகள் நலனுக்கு ரூ.116 கோடி.
காவல்துறை வீட்டு வசதிக்கு ரூ.450 கோடி
குறைந்த நீரில், நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்கு ஊக்குவிக்கப்படும்.
பழங்குடியினர் துறைக்கு ரூ.265 கோடி
நீதித்துறை மேம்பாட்டுக்கு ரூ.983 கோடி
ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி
இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.
ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி
இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்.
சுகாதாரத்துறைக்கு ரூ.10, 158 கோடி
சிறைத்துறைக்கு ரூ.282 கோடி
காவல்துறைக்கு ரூ 6,483 கோடி
உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி.
மின்சாரம் எரிசக்தி துறைக்கு ரூ.16,998 கோடி
கோவை, திருச்சி, மதுரையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,996 கோடி
தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு
தமிழ் பல்கலைக்கழகத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு
தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு
100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி
கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி
தமிழக அரசின் மொத்த கடன் ரூ 3,14,166 கோடி
உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு.
மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
ஊரகப்பகுதிகளில் 135 இடங்களில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
ஐடி துறைக்கு ரூ.116 கோடி
போக்குவரத்துறைக்கு ரூ.2,191 கோடி
வணிகவரி மூலம் ரூ.77,234 கோடி வருவாய் கிடைக்கும்.
நெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி ஒதுக்கீடு
குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி.
அரசின் மொத்த செலவு ரூ. 1,75,351 கோடி.
2017-18-ல் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும்
கூட்டுறவுத்துறைக்கு ரூ.1,830.50 கோடி.
மகப்பேறு உதவி ரூ.12,000 முதல் 18,000 ஆக உயர்வு
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி புதிய கடன் வழங்க நடவடிக்கை.
மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி
107.5 கி.மீ தொலைவுக்கு 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை.
உதய் மின் திட்டத்தில் இணைந்ததால் கடன் வட்டி குறைந்து ரூ. 1,335 கோடி சேமிக்கப்படும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்தாண்டு நடத்த ரூ.75 கோடி ஒதுக்கீடு.
சாலைகள் அகலப்படுத்த மற்றும் புதிய பாலங்கள் கட்ட ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.
100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்.
ஆண்டுதோறும் தனிநபர் மின்சார பயனீட்டு அளவு அதிகரித்து வருகிறது.
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.10,067 கோடி.
சென்னை, புறநகர் சாலைத் திட்டங்களுக்கு ரூ.744 கோடி.
ராமநாதபுரம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம்.
குடிமராமத்து பணிகளுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு.
சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
நீர்வள ஆதராங்களுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு.
தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவை, 34 லட்சம் ஏக்கரில் இருந்து 39 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.
உலகவங்கி உதவியுடன் ரூ. 3,042 கோடியில் நீர், நில வளத்துக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தாமிரபரணி, நம்பியாறு அணைகளை இணைப்புக்கு ரு.300 கோடி
ரேஷன் கடையில் பருப்புகள் தொடர்ந்து மானிய விலையில் வழங்கப்படும்.
உணவுப் பொருள் மானியத்துக்காக ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.
அரசின் சார்பில் விலைக் கட்டுப்பாடுக்கு புதிய பொருள்கள் விற்கப்படும்.
ஏழைகளுக்கு 12,000 பசுகள், 6,000 ஆடுகள் வழங்கப்படும்.
கடல் அரிப்பை தடுக்க ரூ.20 கோடியில் புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தப்படும்.
25 கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.3,790 கோடி
மீன்வளத்துறைக்கு ரூ.860 கோடி ஒதுக்கீடு.
தொழிலாளர் நலத்துறைக்கு 1,010 கோடி
மீனவர்களுக்கு ரூ. 85 கோடி செலவில் 5,000 வீடுகள்.
மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.5,000 உதவித்தொகை.
படகு, டீசல் அளவு 15,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக உயர்வு.
விதை உற்பத்தியை வலுப்படுத்த ரூ.50 கோடியில் திட்டம்.
ஆவின் பால் பொருள்களை பிரபலப்படுத்த 200 புதிய பாலகங்கள்.
நாட்டு மாடு இனப்பெருக்கத்துக்கு புதிய திட்டம்
வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட கூடுதலாக 590 மையங்கள் அமைக்கப்படும்.
உழவர் உற்பத்திக் குழுவுக்கு ரூ.100 கோடி.
கோழிப்பண்ணை வளர்ச்சிக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com