அதிமுக பிளவுபட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணி உருவான பிறகு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குலதெய்வக் கோவிலுக்கு வழிபட ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்.
அதன் பிறகு அங்கிருந்து சொந்த ஊருக்கு சென்றார். ஆண்டிப்பட்டி அருகே கணவாய் பகுதியில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.
அங்கிருந்து பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டு, தேனி வழியாக தான் வெற்றி பெற்ற போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தார்.
சொந்த மாவட்டத்திற்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆயிரக்கணக்கானோர் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வசிக்கும் ஸ்ரீதியாகராஜ பண்டிதரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவியுடன் நேரில் சென்று அவரிடம் ஆசீர் பெற்றார்.
-எஸ்.திவ்யா.