தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சியின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், நீரின்றி பயிர்கள் கருகி போனதால் அதிர்ச்சியின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டும் இறந்து போனார்கள்.
இந்நிலையில், தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அய்யாகண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அரைநிர்வாணமாகவும், பிச்சை எடுத்தும், கழுத்தில் மண்டை ஓட்டினை அணிந்து கொண்டும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இப்போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.