திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர அனைத்து வணிகர்கள் சங்கங்களின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் 22.03.2017 அன்று மாலை 6 மணி அளவில் தனபால் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநிலத் தலைவர் மற்றும் அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசிய முதன்மை துணைத்தலைவர் A.M.விக்கிரமராஜா தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி Goods and Services Tax (GST) சட்டத்தை இயக்குவதை புறக்கணிப்பது குறித்தும், வெளிநாட்டு மென்பானங்களான பெப்சி-கோக் புறக்கணிப்பு போராட்டத்தை பற்றியும், வரும் மே மாதம் 5 தேதி விழுப்புரத்தில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில மாநாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேரமைப்பு மண்டல தலைவர்கள் மற்றும் ஆரணி நகர அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-மு ராமராஜ், ச. ரஜினிகாந்த்.