லைக்கா ஞானம் அறக்கட்டளை நிறுவனத்தினர் சார்பில், வடக்கில் அமைக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அழைக்கப்பட்டிருந்த நிலையில், தொல்.திருமாவளவன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோரின் வற்புறுத்தல் காரணமாக குறித்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் ஈழத்து விஜயம் ரத்தாவதற்கு காரணமாக அமைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோருக்கு எதிராக யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
‘கலைஞனை கலைஞனாக வாழ விடு’, ‘மஹிந்தவுக்கு கரம் கொடுத்த உங்களுக்கு தலைவனை தடுக்க என்ன தகுதி உண்டு?’, ‘திருமாவளவா, வேல்முருகா ஈழத் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தாதே’, சுயநலவாதிகளே ஈழத் தமிழர்கள் விடயத்தில் தலையிடாதே’ போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய குறிப்பு:
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் புகைப்படத்திற்கு பதிலாக, திருமுருகன் காந்தியின் படம் தவறாக அச்சடிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-என்.வசந்த ராகவன்.