முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் தேர்தலில் தங்கள் வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனை ஏற்ற ஜி.கே.வாசன், இந்த தேர்தலில் மதுசூதனனை தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரிப்பதாக அறிவித்தார்.
மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனனை ஆதரித்து இன்று முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்வார்கள் என்றும், நாளை மறுநாள் ஓ.பன்னீர்செல்வத்துடன சேர்ந்து பிரசாரம் செய்ய உள்ளதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
-ஆர்.மார்ஷல்.