சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணியின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாசாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளம் உடனடியாக சரிசெய்யப்பட்டது.
இன்று (09.04.2017) அந்த இடத்திற்கு அருகே மீண்டும் ஒரு புதிய பள்ளம் உருவாகி, அந்த பள்ளத்தில் அரசு பேருந்தும், காரும் கவிழ்ந்தது. பேருந்தில் சென்ற பயணிகள் சிலருக்கும், காரில் பயணம் செய்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வழித்தடத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. பள்ளத்தில் கவிழ்ந்த வாகனங்கள் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
-எஸ்.திவ்யா.