சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின் உண்மை நகல்.

Dr. Nasim Zaidi  Chief Election Commissioner.

Dr. Nasim Zaidi
Chief Election Commissioner.

Shri Om Prakash Rawat  Election Commissioner

Shri A K Joti

ByeElectionTN_09042017

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந்தேதி நடைபெற இருந்த நிலையில், தேர்தலை ரத்து செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 29 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கான காரணங்கள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன

பணப்பட்டுவாடா நடந்ததற்கான ஆதாரங்கள் வருமான வரி ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு முன் தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் இதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. முறைகேடுகளை தவிர்க்க எடுக்கப்படும் முயற்சிகள் நூதன முறையில் மீறப்பட்டுள்ளன

அரசியல் சட்டத்தின் 324- வது பிரிவின் கீழ் ஆர்.கே. நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 21-ல் தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக இதுவரை மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.    

ஏப்ரல் 7-ந்தேதி வரை ரூ.18,80,700 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன், வெள்ளித் தட்டு, புடவைகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணப்பட்டுவாடா தொடர்பான புகாரில் பலர் பிடிப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்

டெல்லியில் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்கு பின் தேர்தல் ரத்து செய்யப்படும் முடிவு எட்டப்பட்டுள்ளது

நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

–டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com