பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்!

tn. formers leaderayyakannutn.formers tn.formers1

பிரதமரை சந்திக்க வைப்பதாக கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர் என, பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் இன்று திடீரென நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். மனு அளித்த பின்னர் வெளியே வந்த விவசாயிகள் திடீரென ஆடைகளை களைந்து போராட ஆரம்பித்தனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “பிரதமர் எங்களை பார்க்காததால் ஆடையின்றி போராட்டம். இதுவரை பிரதமர் எங்களை சந்திக்காததால் எங்களுக்கு வேறு வழியில்லை. பிரதமரை சந்திக்க வைப்பதாக கூறி எங்களை ஏமாற்றிவிட்டனர். இது தான் எங்களது நிலைமை என்று கூறினார்.

பிரதமர் அலுவலகம் முன்பாக திடீரென தமிழக விவசாயிகள் நிர்வாணமாக ஓட ஆரம்பித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

-எஸ்.சதிஸ் சர்மா.