திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5-ஆம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
விழாவிற்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் ச.லோகநாயகி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணுபிள்ளை மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனா சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். பட்டதாரி ஆசிரியர் ச.வேல்முருகன் ஆண்டறிக்கை வாசித்தார்.
உதவி தொடக்க கல்வி அலுவலர் ச.லோகநாயகி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:
செங்கம் ஒன்றியத்தில் மாதிரி பள்ளியாக மேல்பென்னாத்தூர் பள்ளி திகழ்ந்து கொண்டிருக்கிறது. தன்னம்பிக்கையோடும் வாழ்க்கையில் விடாமுயற்சி இருந்தால் வெற்றிபெற்று முன்னேறலாம் என்று பேசினார்.
கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் செல்வம் வட்டார வளமை மேற்பார்வையாளர் அன்பழகி, ஆசிரியர் பயிற்றுனர் அண்ணாமலை, தலைமை ஆசிரியர்கள் ஜேம்ஸ், சுப்பிரமணி, அன்பழகன், ஜெயவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் த.சங்கீதா, தனலெட்சமி, நாராயணன், ஜோதி, அரசு, மகேஸ்வரி, ராஜா, ஆறுமுகம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் ஆசிரியர்கள் அமலிஜெரினா மற்றும் ரேகா ஆகியோர் நன்றி கூறினார்.
– செங்கம் சரவணக்குமார்.