உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்.
யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்றதில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் தினந்தோறும் பல நல்ல மாற்றங்களை சந்தித்து வருகிறது.
பல அதிரடி உத்தரவுகள் மூலம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வரும் முதல்வர் ஆதித்யநாத், 84 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 138 உயர் அதிகாரிகளை ஒரே நாளில் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியலில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அந்தஸ்தில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடமாற்றம் உத்தரப்பிரதேச அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய சூழலில் இது போன்ற நபர்கள்தான் இந்தியா முழுமைக்கும் தேவை.
-ஆர்.மார்ஷல்.