இலங்கையில் மீன்பிடிப்பதற்காக கடந்த 28-ம் தேதி கடலுக்குள் சென்ற மீனவர் ஒருவருக்கு எதிர்பாரதவிதமாக தலையில் அடிப்பட்டு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரை மருத்துவ உதவிகளுக்காக கரைக்கு கொண்டுவருவதற்கு என்ன செய்வது என்று அறியாது சக மீனவர்கள் தவித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இலங்கை தென்பிராந்திய கட்டளையகம் அளித்த உத்தரவின்படி இலங்கை கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகின் மூலம் சுமார் 62 கடல் மைல்கள் தூரத்தில் இருந்து காலி துறைமுகத்திற்கு பாதிக்கப்பட்ட மீனவரை கொண்டுவந்தனர்.
அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக காலி கராபிட்டிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த கரிசனையை இந்திய மீனவர்களிடமும் காட்டினால், இலங்கை கடற்படையை நாமும் பாராட்டலாம்.
-வினித்.