செயல்பாட்டுக்கு வராத ஆழ்துளை குடிநீர் பம்பு!- சிரமத்திற்கு உள்ளாகும் போளுர் பேரூராட்சி மக்கள்!

IMG-20170504-WA0011

20170414_110912

திருவண்ணாமலை மாவட்டம், போளுர் தேர்வுநிலை பேரூராட்சி, கண்ணன் தெருவில் மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின் மூலம் (பொது நிதி 2016-2017) புதிய ஆழ்துளை கிணறு மற்றும் மினி பவர்பம்பு சுமார் ரூ.2 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது செயல்படாமல் உள்ளது.

இந்த கோடை காலத்தில் குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-ச.ரஜினிகாந்த்.