டெல்லியில் உள்ள துக்ளகாபாத் பகுதியில் ராணி ஜான்சி சர்வோதய கன்யா வித்யாலயா இயங்கி வருகிறது. இதன் அருகே இன்று காலை கன்டெய்னரில் இருந்து ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது.
ரசாயன வாயு கசிவால் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டது. மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வாயு கசிவு தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் பாதுகாப்பு கருதி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-எஸ்.சதிஸ் சர்மா.