இலங்கை கடற்படைக்காக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் கப்பல்!

SL.NAVY 4SL.NAVY1SL.NAVY2SL.NAVY3SL.NAVYSL.NAVY4

இலங்கை கடற்படைக்காக அதிநவீன உயர் தொழில் நுட்பத்தில் போர் கப்பல் ஒன்றை இந்தியா தயாரித்து வழங்கியுள்ளது.

இக்கப்பல் 2,350 டன் எடையை எடுத்துச் செல்லும் வகையில் 105.7 மீட்டர் நீளமும், 13.6 மீட்டர் அகலமும் கொண்டதாகவும் நிர்மாணிக்கப்படுள்ளது.

மேலும், இதில் 18 அதிகாரிகள் மற்றும் 100 மாலுமிகளுக்கான தங்குமிட வசதிகளையும் கொண்டிருப்பதுடன் 4,500 கடல் மைல்கள் தொலைவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அதி நவீன உயர் தொழில் நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், போர் விமானங்களை எடுத்துச் செல்லும் வகையிலான தளத்தினை கொண்டுள்ளதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இக்கப்பலை இலங்கை கடற்படைக்காக அர்பணிக்கும் நிகழ்ச்சி இம்மாதம் 02 ந்தேதி நடைப்பெற்றது. இதில் பாதுகாப்பு தயாரிப்புகளுக்கான செயலாளர்  ஏ. கே. குப்தா, அவரது மனைவி ப்ரீதி குப்தா ஆகியோர் சம்பிரதாயப்படி இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்வில் இலங்கை கடற்படையின் வடபிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா தலைமையிலான இலங்கை கடற்படை பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

-என்.வசந்த ராகவன்.