இலங்கை தென் கிழக்கு கடற்படை கட்டளையின் வீரர்கள் மற்றும் சாச்த்ரவேலி போலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் படி, லாஹுகல காட்டின் நீலகிரி ஆலயத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் ஒரு ஏக்கர் சட்டவிரோத கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
நன்றாக வளர்ந்த சுமார் 5000-த்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகளை கடற்படை வீரர்களும், அதிரடிப்படை போலிசாரும் தீ வைத்து எரித்து அழித்தனர்.
-என்.வசந்த ராகவன்.