மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பகத்தன்மை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டம்: இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு.

ecPN37_09052017

EVM

இந்தியாவில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது பெருத்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.  இது தொடர்பாக இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து மனு அளித்தனர்.

ஆனால், மின்னணு ஓட்டு எந்திரங்களில் தில்லு முல்லு செய்ய முடியும் என்று கூறப்படுவதை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்நிலையில், மின்னணு ஓட்டு எந்திரங்கள் சர்ச்சை பற்றியும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் அனைத்துக் கட்சிகளிடமும் விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் டெல்லியில் நாளை (மே-12 ந்தேதி) நடைப்பெற இருக்கிறது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com