பிளஸ் 2 தேர்வு முடிகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும்; மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் அறிவிக்கப்படாது.

tn-12th-results

பிளஸ் 2 தேர்வு முடிகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசு தற்போது அதிரடியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், மதிப்பெண் அடிப்படையில் இனி ரேங்க் அறிவிக்கப்படாது. மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்படாது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கும் இதே நடைமுறை பொருந்தும். ஆனால், சிறந்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 -கே.பி.சுகுமார்.