நிலுவைத்தொகை வழங்க அரசு ஒப்புதல்; போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

g.b

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்துகள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. 

இந்நிலையில் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி ஆகியோருடன் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிலுவைத்தொகை 1000 கோடி ரூபாய் வழங்க அரசு ஒப்புதல் அளித்ததால் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள நிலுவைத்தொகை செப்டம்பரில் தரப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது. 3 மாதத்துக்கு பின் தொழிலாளர்களின் பிடிப்புத்தொகை கணக்கில் செலுத்தப்படும். 

-கே.பி.சுகுமார்.