திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், மேற்கு ஆரணி ஒன்றியம், சதுப்பேரிபாளையம் கிராமத்தில், ஜவஹர் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர்தேக்கத் தொட்டி கட்டிடம் 21.04.1975 அன்று கர்ம வீரர் கு.காமராஜரின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த குடிநீர்தேக்கத் தொட்டியானது பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து இருக்கிறது. இக்குடிநீர் தொட்டியை சீரமைப்பு செய்யவேண்டுமென பொதுமக்கள் சார்பாக பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும், கிராம சபா கூட்டத்தில் பலமுறை சிறப்பு தீர்மானங்கள் முன் வைத்தும், இதற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை.
கோடை காலம் என்பதால் சதுப்பேரிபாளைய கிராம மக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இக்குடிநீர் தொட்டியை சீரமைத்தால் இக்கிராம மக்களின் குடிநீர் பஞ்சம் தீர்ந்துவிடும்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரி செய்வார்களா?
– மு. ராமராஜ்.
-ச.ரஜினிகாந்த்.