இலங்கை திருகோணமலை துறைமுகத்தில் முகாமிட்டுள்ள ஆஸ்திரேலியா போர் கப்பல்!

TKMITKMI OTKMI ATKMI ETKMI ITKMI JTKMI CTKMI GTKMI DTKMI F

ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் “ஓசியன் ஷெய்ல்ட்” கப்பல் இரண்டு நாள் உத்தியோகபூர்வமான பயணமாக இலங்கை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த ஆஸ்திரேலியா கடற்படையினரை  இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

ஆஸ்திரேலியா கப்பல் இலங்கை திருகோணமலை துறைமுகத்தில் அஷ்ரொப் படகுத்துறைக்கு வந்தடைந்த பின் கிழக்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கப்பலினை பார்வையிட விஜமொன்றை மேற்கொண்டனர்.

அப்பொழுது கப்பலில் கூட்டு ஏஜென்சி அதிரடிப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் ஸ்டீபன் “ஒஸ்போர்ன்”  கப்பலின் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கைகளை பற்றி அதிகாரிகளுக்கு விளக்கினார்

அதன் பிறகு கப்பல் குழுவின் பிரதிநிதிகள் கிழக்குக் கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னைய்யாவை  சந்தித்தனர்.  இந்த சந்திப்பின் போது பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுப்  பரிசுளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வுக்காக இலங்கையின் ஆஸ்திரேலியா உயர் ஆணையாளர் ப்ரைஸ் பவசன், ஆஸ்திரேலியா கடல்சார் எல்லைப்பகுதி படையின் துணை தளபதி கமான்டர் ஜோ க்ரூஸ் ஆகியவர்கள் மற்றும் இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் ஜேசன் சியர்ஸ் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

-என்.வசந்த ராகவன்.