இலங்கை தேசீய கடற்படை வீர்ர் தினத்தை முன்னிட்டு யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூறும் விழா இன்று காலை 9 மணிக்கு வெலிசரவுள்ள படையினர் நினைவுச்சின்னம் அருகில் கடற்படை தளபதி வைஸ்அத்மிரால் ரவீந்திர வீஜேகுணரத்ன தலைமையில் நடைபெற்றது.
இலங்கை நாட்டின் அமைதி, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்த யுத்த வீர்ர்களுக்கு மலர் அஞ்சலி மற்றும் மரியாதை அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளில் இலங்கை கடற்படை தளபதி உட்பட அனைவரும் கலந்துகொன்டனர்.
இந்நிகழ்வுக்காக தலைமை பணியாளர் ரியர் அட்மிரால் சிறிமெவன்ரணசிங்க, மேற்குக் கடற்படைகட்டளை தளபதி ரியர் அட்மிரால் நிராஜ் ஆடிகல ஆகியவர்கள் உட்பட கடற்படைதலைமையகத்தில் மற்றும் மேற்குக் கடற்படை கட்டளையின் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-என்.வசந்த ராகவன்.