வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் கடை, அப்பகுதியில் உள்ள அழிஞ்சிக்குப்பத்தில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மதுபாட்டில்களுடன் ஊர்வலமாகச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பொதுமக்ககள் டாஸ்மாக் கடையை தாங்களே அகற்ற முயன்றதால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இணைந்து டாஸ்மாக் கடையை சூறையாடினர்.
இதனால் போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பெண்கள் மீது காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினர். காவல்துறையினரின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?
-கே.பி.சுகுமார்.