இலங்கையில் இரண்டு கஞ்சா தோட்டங்களை அதிரடிப்படையினர் தீ வைத்து எரித்தனர்!

kanja kanja1kanja2

இலங்கை கடற்படைக்கு கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவலின்படி, கிரிந்தை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் வீரர்கள், கதிர்காமம் போலிஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் இணைந்து 22.05.2017 அன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கதிர்காமம், தம்பே பகுதியில் வாழைத்தோட்டத்தில் சட்ட விரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் அரை ஏக்கர் பரப்பளவு உள்ள இரண்டு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

kanja.F

அந்த தோட்டத்தில் சுமார் 3,250-திற்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் இருந்தன. கஞ்சா செடிகள் அனைத்தையும் அதிரடிப்படை வீரர்கள் தீ வைத்து எரித்தனர். இது சம்மந்தமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.