இலங்கையில் பெய்த கனமழையின் காரணமாகவும், சீரற்ற காலநிலையாலும், இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 146 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 52 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 112 நபர்கள் காணாமல் போய் உள்ளனர்.
கனமழை, காற்று, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு இவற்றால் 1,14,124 குடும்பங்களில் 4,42,299 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 230 வீடுகள் முழுமையாகவும், 1,701 வீடுகள் பாதியளவும் சேதமடைந்துள்ளன. 319 இடங்களில் 24,603 குடும்பங்களை சேர்ந்த 1,01638 நபர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
-என்.வசந்த ராகவன்.