திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்நாகரம்பேடு கிராமத்தில் கிராமப்புற நூலகம் ஒன்று உள்ளது. அது எப்போதும் மூடிய நிலையில் தான் உள்ளது. நூலகம் என்பதற்கு அடையாளமாக பெயர் பலகை எதுவும் இங்கு இல்லை.
குடிகாரர்களின் கூடாரமாகவும், சமூக விரோதிகளின் புகழிடமாகவும் இந்த நூலகம் மாறிப்போனது. மதுவை குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். மேலும், பகல் நேரத்தில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு துணியை காயபோட்டு வருகின்றனர்.
அறிவு கோயிலாக திகழ வேண்டிய நூலகம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரி செய்வார்களா?
-ச.ரஜினிகாந்த்.