மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரப்பூர்வ தேர்வு முடிவுகள்!- முழு விபரம்.

 தேசிய அளவில் முதலிடத்தை பிடித்த  நந்தினி.

தேசிய அளவில் முதலிடத்தை பிடித்த நந்தினி.

FR_CSM_16_Engl_N

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,  ஐ.எப்.எஸ்., தேர்வில் கர்நாடகாவைச் சேர்ந்த நந்தினி, தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

எம். பிரதாப்.

எம். பிரதாப்.

இத்தேர்வில், தமிழகத்தை சேர்ந்த எம். பிரதாப், அகில இந்திய அளவில் 21-வது இடத்தையும், தமிழகத்தில் முதல் மாணவராகவும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பை சேர்ந்தவர். இவரது தந்தை, தாய் விவசாயம் செய்து வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு வரை வத்திராயிருப்பில் உள்ள லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தார்.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை திருநெல்வேலியில் உள்ள ரோஸ்மேரி பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை மதுரை டி.வி.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் படித்தார். சென்னை அண்ணா பல்கலை.,யில் பி.டெக்., (கெமிக்கல் இன்ஜினீயரிங்) படிப்பை முடித்தார்.

தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளார்.

விவசாய குடும்பத்திலிருந்து வந்தாலும், ஐ.ஏ.எஸ்., ஆவதே ஒரே நோக்கமாக கொண்டு, கடந்த 4 வருடங்களாக கடுமையாக முயற்சி செய்தார். பல்வேறு நாடுகளிலிருந்தும் பல லட்ச ரூபாய் சம்பளத்தில், நல்ல வேலைவாய்ப்புகள் வந்தும், அவை அனைத்தையும் உதறிவிட்டு தனது லட்சியத்தை நோக்கி பயணித்து, இறுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com