திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூரில் ஒரு வீட்டில் யானை தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, திருச்சி வனத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட வீட்டில் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 யானை தந்தங்களை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது சம்மந்தமாக கட்டிட தொழிலாளி பிரபு என்பவரை கைது செய்தனர்.
-ஆர்.அருண்கேசவன்.