திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளும், சட்டமன்ற பேரவையில் அவர் நுழைந்ததின் வைர விழாவும் நேற்று சென்னையில் நடந்தது. அந்த விழாவில் பங்கேற்க வந்த காங்கிரசின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு இன்று வருகை தந்தார். அங்கு மரக்கன்று நட்டார். காமராஜர் சிலைக்கு மலர் தூவியும், கட்சி கொடியை ஏற்றியும் மரியாதை செய்தார். பின்னர் தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டி சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
-கே.பி.சுகுமார்.