இந்திய குடியரசு தலைவர் தேர்தல்; ஜூன் 14-ம் தேதி வேட்பு மனு தாக்கல்; ஜூலை 17-ம் தேதி தேர்தல்; ஜூலை 20-ம் தேதி வாக்கு எண்ணிக்கை!

rashtrapati-bhavan

PN48_07062017

ஜூலை 17-ம் தேதி இந்திய குடியரசு தலைவர் தேர்தல் நடக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஜுன் 28-ம் தேதி கடைசி நாள். வேட்பு மனுக்கள் 29-ம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் ஜூலை 1-ம் தேதி ஆகும்.

அதன்பின்னர் போட்டி இருந்தால் ஜூலை 17-ம் தேதி தேர்தல் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 20-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை, வாக்களிக்க தகுதி உள்ள 50 பேர் முன்மொழிய வேண்டும், 50 பேர் வழிமொழிய வேண்டும்வேட்பாளருக்கு முன்னுரிமை அடிப்படையில் வாக்கு செலுத்த வேண்டும். முதலாவது முன்னுரிமை யாருக்கு? என்பதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அடுத்தடுத்த முன்னுரிமையை குறிப்பிடுவதும் குறிப்பிடாததும் அவரவர் விருப்பம்.

இந்த தேர்தலை நடத்துவதற்காக அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும். எம்.எல்..க்கள் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கலாம். அவசர காரணங்களுக்காக வேறு இடங்களில் வாக்களிக்க வேண்டும் என்றால் 10 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் எம்.பி.க்கள், எம்.எல்..க்கள் யாருக்கும் கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கக்கூடாது. வாக்களிப்பவர்களுக்கு எந்த வகையிலும் லஞ்சமோ பரிசுப் பொருளோ கொடுக்க கூடாது.

இவ்வாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com