பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி!

kiran beedi-pmkiran beedi

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கும்,  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் அதிகாரப் போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று (ஜூன் 11, 2017) சந்தித்து பேசினார்.

இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, டில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து பேசியுள்ளார். மேலும், வடக்கு கிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங்கையும், கிரண் பேடி இன்று சந்தித்துள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.