இலங்கையில் முகாமிட்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி!

slpk pk1 pk2 pk3இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ், இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர்களை இன்று (13.06.2017) பாதுகாப்பு அமைச்சகத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

இவர்கள் இடையில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கடற்படை தளபதியின் செயலாளர் கொமடோர் ஜாவேத் இக்பால் மற்றும் இலங்கையின் பாகிஸ்தான் உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இர்ஷான் கான் ஆகியவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

-என்.வசந்த ராகவன்.