மேற்கு லண்டனில், லதிமேர் சாலையில் உள்ள கிரீன் பீல் எனும் அடுக்கு மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 40 தீயணைப்பு வாகனங்களில் 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 20 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 6 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ராயல் ஃப்ரீ, கிங்ஸ், செயின்ட் தோமஸ், செயின்ட் மேரிஸ், செல்சியா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் மற்றும் சார்ரிங் கிராஸ் உள்ளிட்ட மருத்துவமனையில் 70 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேதம் பற்றிய முழுமையான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இறப்பு எண்ணிக்கை உயரும் என்று லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலீசார் எச்சரித்துள்ளனர்.
சேதம் மற்றும் இறப்பு பற்றிய விபரங்கள் அறிய 0800 0961 233 என்ற அவசரகால கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.
-எஸ்.சதிஸ்சர்மா.