இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலங்கை கடற்படையுடன் இணைந்து, அமெரிக்க கடற்படை வீரர்கள் நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை தென் மாகாணத்தில் உள்ள காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பணியில் 112 அமெரிக்க கடற்படை வீரர்களும், 52 இலங்கை கடற்படை வீரர்களும் ஈடுபட்டு உள்ளனர்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் இப்பணி தொடரும் என்று இருநாட்டு கடற்படை வீரர்களும் தெரிவித்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.