திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், சேவூர் ஊராட்சி. இது ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரனின் சொந்த ஊர் ஆகும்.
இங்கு உள்ள EB நகர், விவேகானந்தர் தெரு, இரண்டாவது கிழக்கு வீதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை மற்றும் கழிவு நீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி செய்து தராமல் இருப்பதனால், வீட்டிலிருந்து வெளிவரும் கழிவு நீர் சாலையின் குறுக்கே ஓடுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் சாக்கடை நீரில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவுவதற்கான ஆபத்துகள் உள்ளன. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரி செய்வார்களா?
-மு.ராமராஜ்.
–ச.ரஜினிகாந்த்.