நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் “போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது. அக்கப்போர்; நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில்கூட டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும். வருவேனா, மாட்டேனா? என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர் என்று, நடிகர் ரஜினிகாந்த் குறித்து, நடிகை கஸ்தூரி ஏற்கனவே விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி நேற்று (16.06.2017) திடீரென்று நடிகர் ரஜினிகாந்த்தைச் அவரது வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளார்.
தன்னைப் பற்றி மிக கடுமையாக விமர்சனம் செய்த பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமாவையே தனது அடுத்தப்படத்தில் நடிப்பதற்கு அப்போதே வாய்பளித்தவர் நடிகர் ரஜினி. அப்படி இருக்கும்போது, நடிகை கஸ்தூரி பேச்சையெல்லாம் கணக்கில் எடுத்துகொள்வாரா என்ன?
நடிகர் ரஜினிகாந்த்திற்கு இருக்கும் சகிப்புத்தன்மை; அவர் ரசிகர்களுக்கும் இருக்குமேயானால், அரசியலில் நடிகர் ரஜினி நல்ல பெயர் எடுத்துவிடுவார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com