திருவெறும்பூர் அருகே காட்டூர் கைலாஷ் நகரில் புதிய பயணியர் நிழற்குடை திறப்பு விழா!

BUS STOP KAILASH NAGAR (1)திருவெறும்பூர் மலைக்கோயில் முதல் காட்டூர் மஞ்சத்திடல் வரை வசிக்கும் பொது மக்கள் புறநகர் பேருந்துகள் காட்டூர் கைலாஷ் நகரில் நின்று செல்லவும் புதிய பேரூந்து பயணியர் நிழற்குடை அமைத்துத் தரக்கோரியும் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷிடம் கோரிக்கை வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளை நேரில் சந்தித்து மக்களின் கோரிக்கையை அன்பில் மகேஷ் எடுத்துரைத்தார். இதன் விளைவாக புறநகர் பேருந்துகள் கைலாஷ் நகரில் நின்று செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் காட்டூர் கைலாஷ் நகரில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் தலைமை வகித்தார். திருவெறும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு புதிய பயணியர் நிழற்குடையைத் திறந்து வைத்தார். அப்போது மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் அப்துல்குத்தூஸ், ஞானதீபம், தனசேகரன், மணிமாறன், மற்றும் நகர் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.