இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி கடிதம்.

File Photo.

File Photo.

Draft D1 Draft D2

indian fishers

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 5 மீனவர்கள், அவர்கள் சென்ற படகுடன் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்கள் உட்பட இலங்கை சிறையில் உள்ள 16 தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை வசம் உள்ள 136 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க செல்லும்போது, இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்டு, எண்ணற்ற துயரங்களுக்கு ஆளாவது குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர், 61 நாள் தடைக்காலத்திற்கு பிறகு, பாக் நீரிணைப் பகுதியில், மீன் பிடிக்க சென்றபோது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள காரைநகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தமிழக முதலமைச்சர், பாக் நீரிணைப் பகுதியில் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்படும் சம்பவம் குறித்து, மறைந்த மாண்புமிகு அம்மா, பிரதமரின் கவனத்திற்கு பல முறை கொண்டு வந்துள்ளதையும் நினைவு கூர்ந்துள்ளார்.

எனவே, இப்பிரச்னைக் குறித்து, தூதரக வாயிலாக உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு, மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்களை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி, இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட 5 மீனவர்களுடன் இலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து, இலங்கை வசம் உள்ள 136 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com