இலங்கை கொழும்பு துறைமுகத்தில் பிரான்ஸ் போர் கப்பல்கள்!

FRANCE NAVEY4FRANCE NAVEYFRANCE NAVEY1FRANCE NAVEY2FRANCE NAVEY3

பிரான்ஸ் கடற்படையின்  மிஸ்டல்மற்றும்கோபட் என்ற இரு போர் கப்பல்கள் 5 நாள் பயணமாக இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. வருகை தந்த இக்கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

மிஸ்டல் கப்பலில் 56 அதிகாரிகள் உட்பட 431 கடற்படை வீரர்களும், கோபட் கப்பலில் 18 அதிகாரிகள் உட்பட 157   கடற்படை வீரர்களும் வந்துள்ளனர்.

இம்மாதம் 26-ம் தேதி வரை இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கத்தில் இலங்கை வெலிசர கடற்படை முகாமில், இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளில் ஈடுப்பட உள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.